நாடளாவிய ரீதியில் இதுவரை 3 லட்சத்து 2 ஆயிரத்து 852 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய நாளில் மாத்திரம் 39 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சர்வமத தலைவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பதுளை மாவட்டத்தில் பௌத்த மதகுருமார்களுக்கு வழங்கப்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் முதல் மேலும் மூன்று நாட்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.