மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியலுக்காக மக்களை ஏமாற்ற தான் ஒருபோதும் தயாரில்லை: அங்கஜன் கருத்து

- Advertisement -

அரசியலுக்காக தனது மக்களை ஏமாற்ற தான் ஒருபோதும் தயாரில்லை என, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான, அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு தான் துணை போவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

தான் மீள்குடியேற்ற பிரதேசத்தை சேர்ந்தவர் என்னும் அடிப்படையில், மக்களின் வலியை நன்கு உணர்ந்து செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் அரசாங்கத்தின் முகவர் அல்ல எனவும், மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தில் பிரதிபலிக்கும் நபராகவே அரசாங்கத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் தனியார் காணி சுவீகரிப்பு தொடர்பில் தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக, மக்களால் தோற்கடிக்கப்பட்ட சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தவறான ஒரு கருத்தை கொண்டு சேர்ப்பதற்கு முயற்சிப்பதாக, அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள தனியார் காணியை அவர்களின் சம்மதம் இன்றி சுவீகரிப்பதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான, அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில், வேலணை பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெளிவான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தினால் மக்களுக்காக வழங்கப்படும் திட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்த வழியேற்படுத்தவும், மக்களின் தேவைகளை அரசாங்கத்துக்கு கொண்டு செல்லவுமே அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆகவே, அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கிலேயே காணி சுவீகரிப்பு விடயத்தை முன்னிறுத்தி சிலர் குழப்பம் விளைவித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காணி சுவீகரிப்பு விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனியான விவாதம் கோர முடியாதவர்களே, அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தீர்மானம் எடுக்குமாறு கோரி குழப்ப நிலையை உருவாக்குவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்களின் பிரச்சினைகள் குறித்து தான் நன்கு அறிந்துள்ளதாகவும், போலி தேசியம் பேசி, நடைமுறைக்கு சாத்தியமற்ற தீர்மானங்களை எடுக்க தான் தயாராக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மக்களுக்கு தன்னால் செய்ய கூடியவற்றை சொல்லிலும் செயலிலும் வெளிப்படையாக செய்வதாகவும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான, அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz