மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

- Advertisement -

கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதற்கு முறையானதொரு திட்டம் அவசியமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது பெப்பிரவரி மாதம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இவ்வாறு உயிரிழந்தவர்களில் நூற்றுக்கு 70 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த ஜனவரி மாதம் முழுவது 112 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெப்பிரவரி மாதம் 20 நாட்களுக்குள் அதைவிட அதிகளவான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான புள்ளிவிபரங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில்  சுகாதார அமைச்சு உடனடியாக அறிக்கையொன்றை வெளியிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் உரிய புள்ளிவிபரங்கள் பதிவு செய்யப்படாமையினால் பொது மக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில்  போதிய  தெளிவின்மை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த   அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்  வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார்

கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் உரிய வேலைத்திட்டம் கிடையாது. உலக நாடுகளை பொறுத்தவரையில் நீண்டநாள் நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. ஆனால் எமது நாட்டை பொறுத்தவரையில்  எந்த தரப்பினருக்கு தடுப்பூசியினை வழங்குவது என்பது தொடர்பில்  தொற்றுநோய் தடுப்பு பிரிவினரால் உரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க  முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.   பொதுமக்கள்  எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். யாரை தொடர்பு கொள்ள வேண்டும். போன்ற  கேள்வி எழுந்துள்ளதுடன்  மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் போதிய  தெளிவின்மை காணப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு இறுதி அறிக்கையை ஆராய பேராயர் மெல்கமினால் குழு நியமிக்கவுள்ளதாக தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தின் அதிகாரி ஒருவரை...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாக, வெளியுறவு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு துணை நிற்பதுடன்,...

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம்..!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவதாக இரணைதீவு பகுதியில் இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் ஓட்டமாவடி மற்றும்...

க.பொ.த உயர்தர – சாதாரண தரீப்பட்சைகள் நடாத்தும் அட்டவணையில் மாற்றம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரீப்பட்சைகளை நடத்தும் அட்டவணையில், மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, அரசாங்கம் எந்தவொரு தரப்புடனும் இதுவரை கலந்துரையாடவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன், இவ்வாறான...

மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க உடன் இணைந்து பணியாற்ற தாம் தயார்: ஐ.ம.ச கருத்து!

மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் மாத்திரமே இணைந்து செயற்பட உள்ளதாக...

Developed by: SEOGlitz