மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் நெல் களஞ்சியசாலை ஒன்று அமைக்க தீர்மானம்: பந்துல தெரிவிப்பு!

- Advertisement -

கிழக்கு மாகாணத்தில் நெல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மட்டக்களப்பில் நெல் களஞ்சியசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

உணவு ஆணையாளர் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

- Advertisement -

அத்துடன், நெல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கிழக்கில்  இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நெல்லை எடுத்துச் சென்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை கவனம் செலுத்துமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு இலட்சம் சதுர மீற்றர் நிலப்பரப்பில் மத்திய நெல் களஞ்சியசாலை அமைக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாண விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை குறித்த  நெல் கலஞ்சியசாலையில் சேமிப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படுமெனவும் வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த சாதரண தர பரீட்சை தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்த முக்கிய அறிவித்தல்..!

கல்விப்பொதுத்தராதர சாதராண தர பரீட்சை நடவடிக்கைகளின் போது அனைத்து    சிசுசெரிய பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார வழிகாட்டுதலகளுக்கமைய சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்...

ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐ.நா சபை அழைப்பு..!

இந்து சமுத்திரத்தில் சிக்கியுள்ள ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில்...

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை...

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்: ஜோபைடன்!

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க வான் தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சிரியாவிலுள்ள ஈரான்...

Developed by: SEOGlitz