மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்பஹாவில் மூடப்பட்டிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை திறக்கப்படும்!

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கம்பஹா நகரில் மூடப்பட்டிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும், நாளை முதல் (22) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா நகரில் உள்ள பொது சந்தை மற்றும் அதனை அண்மித்த வர்த்தக நிலையங்கள் என்பன திறக்கப்படும் என, கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், பரிசோதனைகளின் அடிப்படையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்ட நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்படுத்தலை நிறைவு செய்த நபர்கள், நாளை முதல் தமது வர்த்தக நிலையங்களை திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நபர்கள், தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ததன் பின்னர், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என, கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹா பொது சந்தையுடன் தொடர்புடைய 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 8 ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரத்தினக்கல் அகழ்வு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, லக்கல பிரதேச செயலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்,  குறித்த நடவடிக்கையானது...

யாழில் குழந்தையை தாக்கிய தாயின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஒன்பது மாத குழந்தையொன்றை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய், சிறுவர் சீர்திருத்தப்பளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எமது...

சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தபட்ட நாராங்கலை மலை..!

பதுளை மாவட்டத்தின் சொரணாத்தொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட Narangala மலையை சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாவாக்கலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்!

தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தலாவாக்கலை –...

யாழ் மாநகர சபை முதல்வரை சந்தித்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Bernard lelarge யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்ப்பாண...

Developed by: SEOGlitz