திருகோணமலையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக உப்புவெளி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த வாகன விபத்து திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வாகன விபத்தில் காயமடைந்த 29 வயதுடைய நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வாகனம் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வாகன விபத்து தொடர்கான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.