நாட்டின் Oxford-AstraZeneca COVIShield தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏனைய கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வைத்திய ஆய்வுகூட விஞ்ஞான நிபுணர் சங்கம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
நாட்டில் புதியவகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஏனைய தடுப்பூசிகளுக்கு அவசியம் ஏற்படலாம் என வைத்திய ஆய்வுகூட விஞ்ஞான நிபுணர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.
மேலும், புதியவகை கொரோனா வைரஸுற்கு எதிராக AstraZeneca COVIShield தடுப்பூசி செயற்படுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது Oxford-AstraZeneca COVIShield தடுப்பூசிக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஏனைய தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடியாது எனவும் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.