அரசாங்கத்தின் புதிய கொள்கையின் ஊடாக, ஏற்றுமதியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவிக்கின்றார்.
எதிர்க் கட்சி அலுவலத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதியின் 25 வீதத்தை இலங்கை ரூபாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய வங்கியினால் புதிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள், சில நேரங்களில் டொலரை இலங்கைக்கு கொண்டுவருகின்ற அதேவேளை, வெளிநாடுகளிலும் வைப்பிலிடுகின்றனர்.ஏற்றுமதியாளர்களில் பெரும்பலானோல், மூலப் பொருட்களை கொண்டுவருவதற்கே ஏற்றுமதியின் இலாபத்தைப் பயன்படுத்துகின்றார்கள். சம்பளம் மற்றும் மின் கட்டணம் என்பவற்று எஞ்சியவற்றையே பயன்படுத்துகின்றனர்.இந்த நிலையில், தற்போதைய கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாரிய போராட்டத்திற்கு மத்தியிலேயே இந்த ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் போட்டியிடுகின்றனர்.மிகவும் குறைவான இலாபத்துடனேயே அவர்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கினறன்றனர்.இந்த நிலையில் ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதியின் 25 வீதத்தை இலங்கை ரூபாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு எனில் 75 வீதமே அவர்களின் கையிருப்பில் இருக்கும்.இந்த நிலையில் அடுத்த மாதத்திற்கான மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தினால், சந்தையினால் அவர்கள் பணத்தினைப் பெற வேண்டிய நிலை ஏற்படும்.