மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை ஆராயும் விசேட குழுவின் 1ஆவது சந்திப்பு நாளை!

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, நாளைய தினம் (22)  ஒன்று கூடவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த 19 ஆம் திகதி குழுவொன்று நியமிக்கப்பட்டது.

- Advertisement -

குறித்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பான அறிக்கையொன்றை முன்வைக்குமாறு குறித்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, உதய கம்மன்பில, ரமேஸ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இது தொடர்பான அறிக்கையை, எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, குறித்த குழு நாளை பிற்பகல் மூன்று மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த குழுவை தாம் ஏற்றுக் கொள்வதில்லை எனவும், சாதாரண தரப்பரீட்சையிலேனும் சித்தியடையாத நபர்களே அந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாகவும், பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை, காலதாமதமின்றி பொது மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை, உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும், தமக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி, நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்பாக மக்கள் நேற்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி, குறித்த போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்படும் தன்மை காணப்படுவதாகவும் எச்சரிக்கை...

1000 ரூபா சம்பள விவகாரம் -ஆட்சேபனைகளை ஆராய கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என, சம்பள நிர்ணய சபையில்...

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் மனித உரிமை பேரவையில் இன்று

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக இந்த தீர்மானம்...

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள  நிலையில்  அது தொடர்பில்  ஆராய்வதற்கு...

க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில்  இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 2020 ஆம்...

Developed by: SEOGlitz