வாழைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு நடவடிக்கையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யபட்ட பெண்ணிடம் இருந்து 3 கிலோ 600 கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பெலவத்தை பகுதியில் கஞ்சா திரவம் அடைக்கப்பட்ட ஆறு போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2 தசம் 5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைபொருள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.