சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான 16 பேரும் பெண் கைதிகள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.
இதன்ப்டி, வெலிகட சிறைச்சாலையில் 907 பேரும், மெகசின் சிறைச்சாலையில் 878 பேரும், மஹர சிறைச்சாலையில் 824 பேரும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 445 பேரும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 368 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 477 கைதிகள் மற்றும் 136 சிறைச்சாலை அதிகாரிகள் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், தொற்றுக்குள்ளான 99 கைதிகள் மற்றும் 22 சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.