கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், T – 56 ரக துப்பாக்கி குண்டுகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் உள்நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நபர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கைதுசெய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்றிரவு ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நபர் கைது செய்யப்பட்ட போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகைக்கான ஒத்திகை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.