மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள சீன மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவை ஆய்வு!

- Advertisement -

இலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக, ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின், நாகதீபம், அனலைதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளிலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலமான மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

- Advertisement -

இந்த மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனா தெரிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு இந்தியா எதிர்ப்பு வெளியிட்டதாகவும் கூறப்படும் நிலையில், அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சர்வதேச ரீதியான ஏல விற்பனை நடைமுறைகளுக்குப் பின்னரே சீன நிறுவனமொன்றுக்கு குறித்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டதாக, இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது மின் உற்பத்திக்காக டீசல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான செலவினம் மிக அதிகமானது எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவை மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும், இந்த திட்டத்தை இரத்து செய்வதற்கான தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும், இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவு நாளை..!

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை...

மீண்டும் அணிக்கு வரும் கெய்ல் – இலங்கை தொடர் விபரம் உள்ளே..!

இருபதுக்கு 20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெய்ல் மற்றும் Fidel Edwards ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் குறித்த இருவரும் இணைக்க்பட்டுள்ளனர். மேற்கிந்திய...

நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில்  21 மாவட்டங்களில் இருந்து 497 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 151...

ஐ.ம.ச வின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம்...

COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64...

Developed by: SEOGlitz