நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த நாட்களில் முற்பகல் 8.30 தொடக்கம் நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் astrazeneca covishield கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேருக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நாரஹேன்பிட்டி ராணுவ வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட மத்திய நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.