மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகளவிலான தொற்றாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவில் அடையாளம்!

- Advertisement -

நாட்டில் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நாட்டில் நேற்றைய நாளில் மாத்திரம் 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 21 பேர் கோட்டையிலும், மட்டக்குளியவில் 20 பேரும், 18 பேர் அவிசாவளையிலும், ஹோமாகமையில் 23 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 13 பேர் நீர்கொழும்பிலும், 11 பேர் சீதுவையிலும், அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 40 பேரும், கண்டி மாவட்டத்தில் 57 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேரும், பதுளை மாவட்டத்தில் 19 பேரும், குருணாகலை மாவட்டத்தில் 18 பேரும், நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 78 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 72 ஆயிரத்து 566 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 433 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 6 ஆயிரத்து 50 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கமைய, 42 வைத்தியசாலைகளில் 2 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

மேலும், 27 இடைநிலை பராமரிப்பு மையங்களில் 3 ஆயிரத்து 445 பேரும், 3 கட்டணம் செலுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையங்களில் 265 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் 3 பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தின், பள்ளியாகொட்டுவ மற்றும் கல்ஹின்ன ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி 166 A கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்து முடக்க செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz