கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் ஆயிரத்து 538 பேர் பயணித்துள்ளனர்.
இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த பயண நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த ஆயிரத்து 82 பேர் 14 விமானங்களினூடாக இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, குவைத்திலிருந்து 294 பேரும், கட்டாரிலிருந்து 180 பேரும், சீனாவிலிருந்து 130 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 91 பேரும், இந்தியாவிலிருந்து 73 பேரும், இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், பிரித்தானியாவுக்கான விமான வேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த அனைவரும் முப்படையினரால் நடாத்திசெல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 456 இலங்கையர்கள் 12 விமானங்களினூடாக பல்வேறு தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.