- Advertisement -
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தீச்சட்டி பேரணி ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணியானது ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் நோக்கி பயணிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.