பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, விபத்துக்குள்ளான சைக்கள் பயணித்துத்து கொண்டு இருந்த நிலையில், வண்டி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, கடலுக்குள் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் எமது கெப்பிட்டல் செய்திபிரிவுக்கு தெரிவித்தனர்.
இதனிடையே, குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் கற்கோவலத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய நபர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் இடம்பெற்ற வீதியூடாகப் பயணித்தவர்கள் இன்று காலை பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அத்துடன், கறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்திதுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.