உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சந்தேகநபரான மொஹமட் சஹ்ரான் ஹாசிமின் ஆயுதப்பயிற்சி கல்லுரியில் பயிற்சிபெற்ற பெண்ணொருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணை பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட தேடுதல் நடவடிக்கையில் நேற்று குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனெல்லை ஹங்குல பகுதியில் வைத்து 24 வயதுடைய பெண்ணொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் சகோதரர்கள் மூவர் உட்பட தந்தை ஆகியோர் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.