திருகோணமலை எண்ணெய்த்தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து முழுமையாக பெற்றுக்கொள்வது தொடர்பில் எதுவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என எரிசக்தி அமைச்ச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
எண்ணெய்த்தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து முழுமையாக பெற்றுக்கொள்வது தொடர்பில் எதுவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. நான் தெளிவாகவே கூறினேன். இந்தியாவிடம் குத்தகைக்கு வழங்கிய எண்ணெய்தாங்கிகளை மீண்டும் எம் வசப்படுத்துவோம். இலங்கைக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் கூட்டுத்திட்டமாக எண்ணெய்தாங்கி திட்டம் முன்னெடுக்கப்படும். இந்திய நிறுவனத்துடன் இணைந்து அதனை அபிவிருத்தி செய்வத்றகு எதிர்ப்பார்த்துள்ளோம்.எனது அமைச்சினூடாக திருகோணமலை எண்ணெய்த்தாங்கிகளை அபிவிருத்தி செய்யவேண்டியது எனது பொறுப்பாகும். அது தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளேன். கடந்த அரசாங்கம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 99 எண்ணெய்தாங்கிகளை இந்தியாவிடம், குத்தகைக்கு வழங்கியிருந்தது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.