மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி கோரி தீச்சட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு..!

- Advertisement -

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்ப போராட்டத்தை ஆரம்பித்து 04 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று தீச்சட்டி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இன்று காலை 09 மணிக்கு கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பிக்கும் தீச்சட்டிப் போராட்ட பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றல் வரை முன்னெடுக்கப்படும் என காணமல் போனோரின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அத்துடன்  இந்த போராட்மானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இடம்பெறவுள்ள நிலையில் தமக்ககான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்கான ஒரு கோரிக்கையாக அமையும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

20ம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் குறித்த தினத்தன்று தீச்சட்டி போராட்டமாக முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தமது வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் கிடைக்கும்வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும்வரையிலும் குறித்த போராட்டத்தை கைவிடப் போவதில்லையெனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த சாதரண தர பரீட்சை தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்த முக்கிய அறிவித்தல்..!

கல்விப்பொதுத்தராதர சாதராண தர பரீட்சை நடவடிக்கைகளின் போது அனைத்து    சிசுசெரிய பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார வழிகாட்டுதலகளுக்கமைய சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்...

ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐ.நா சபை அழைப்பு..!

இந்து சமுத்திரத்தில் சிக்கியுள்ள ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில்...

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை...

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்: ஜோபைடன்!

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க வான் தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சிரியாவிலுள்ள ஈரான்...

Developed by: SEOGlitz