எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமக்கு ஆதரவளிக்குமாறு கோரி இலங்கை அனுப்பிய கடிதத்திற்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை என வௌியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தொடர்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மித்த சம்பவங்களின் அடிப்படையில் இந்தியா தமக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜயனாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதிலிருந்து இலங்கை பின்வாங்கியமை இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.