கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ஏனைய சில பகுதிகளிலும் இன்று 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட தெஹிவளை -கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபை பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், மஹரகமை, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவை நகர சபை பகுதிகளிலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலும் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இரத்மலானை பகுதியிலும், இன்று 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 வரையிலான 16 மணி நேர காலப்பகுதியிலேயே குறித்த நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
அம்பத்தலை சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.