மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம் பெயர் இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு..!

- Advertisement -

புலம் பெயர் இலங்கைத் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடரும் என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன், தொழிலாளர்களை அழைத்துவரும் நடவடிக்கைகயை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய போதிலும், தாம் குறித்த நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாடு திரும்புவதற்காக 45 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாகவும், 92 ஆயிரம் பேர் வரை இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு திரும்புவதற்காக கோரிக்கை முன்வைக்கும் நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், புலம் பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மற்றும் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை என்பன, உரிய பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை அண்மித்துள்ளது

நாட்டில் 338 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 948...

ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஒரே தடவையில் நடப்பதை நிறுத்தவே இவ்வாறு செய்தோம்: சுமந்திரன் விளக்கம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரேநாளில் நடைபெறுகின்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை தடுக்கும் நோக்கிலேயே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ள...

வன்முறை – தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பரிசுத்த பாப்பரசர் அழைப்பு!

வன்முறை மற்றும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு  பரிசுத்த பாப்பரசர் Francis ஈராக் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் Francis முதன்முறையாக இன்று ஈராக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே,...

கொரோனா தொற்றினால் மேலும் 4 உயிரிழப்புக்கள் பதிவு – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு 10, இராஜகிரிய, கொழும்பு 08 மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு...

Developed by: SEOGlitz