நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, மாத்தளை பிரதேசத்தைச்சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் தெல்தெனிய வைத்திநாலையில் சிகிச்கை பெற்று வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கலகெடிஹேன பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நியுமோனியா மற்றும் பற்றீரியா தொற்று ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நியுமோனியா , சிறுநீரக நோய் , உயர் குருதி அமுக்கம், மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 506 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 72 ஆயிரத்து 566 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 938 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.