மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஆதிக்க சக்திகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும்: தினேஷ் கருத்து!

- Advertisement -

எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது, இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை முன்வைக்க விரும்புவதாக, பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசிடோனியா மற்றும் Montenegro ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உள்ளடக்கிய அமைதிக்கான தமது உறுப்பாட்டை தாம் வெளிப்படுத்துவதாக, குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, மக்களின் காணிகளை மீள கையளித்தல் மற்றும் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாகவும் குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், போர் குற்றங்களை நிவர்த்தி செய்தல் மற்றும் நாட்டில் அமைதியான சூழலொன்றை கட்டியெழுப்புவது, தற்போது தேவையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து,  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிசீலிக்கும் எனவும் குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இறுதிக்கட்ட போரில்  ஏதேனும் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுக் கொடுத்து குற்றவாளிகளை தண்டிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்காகவே ஜனாதிபதியினால் உயர் நீதிமன்ற நீதியரசரொருவர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கொண்டுவரப்பட்ட 30 இன் கீழ் 01 தீர்மானம் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் வௌியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாத் தோற்கடிக்கப்பட்டமை முதல் இலங்கை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் பின்னால் இருக்கும் ஆதிக்க சக்திகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கோரியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz