பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டவர்களிடம் தொடர்ச்சியாக பொலிஸாரினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் இன்று பொலிஸாரினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்குள் உட்பட்ட எட்டு பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் இவ்வாறு வாக்மூலம் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் இன்று முற்பகல் குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உற்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.