மெய்ப்பொருள் காண்பது அறிவு

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – கரண்ணாகொடவை விடுவிப்பது குறித்து பரிசீலனை!

- Advertisement -

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொடவை விடுவிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த வழக்கு சம்பா ஜானகி ராஜத்ன, அமல் ரனராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த அரச சட்டத்தரணி வசந்த பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கின் பிரதிவாதியாக  வசந்த கரண்ணாகொடவை பெயரிட்டமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப் பெறும் வரை, இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு அரச சட்டத்தரணி வசந்த பெரேரா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழாம், இந்த வழக்கை எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் திகதி வரை ஒத்திவைத்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த இளைஞர்களை கடத்தியமை தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட 667 குற்றச்சாட்டுக்களின் கீழ், சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது,

இதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகள், குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நெல் கொள்வனவின்போது ஆறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை

போட்டி விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, எதிர்வரும்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை  முழுமையாக ஒப்படைப்பதற்கு  சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இணக்கம்...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

Developed by: SEOGlitz