உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பான அறிக்கையொன்றை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, உதய கம்மன்பில, ரமேஸ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இது தொடர்பான அறிக்கையை, எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது குறித்து கண்காணிப்பதற்கு, குழுவின் செயலாளராக ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம், ஹரிகுப்த ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது