மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் நேற்றைய தினத்தில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

- Advertisement -

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் நேற்று மாத்திரம் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதில் 280  பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என  கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன்படி, கொழும்பு நாரஹென்பிட்டி பகுதியில் 37 பேருக்கும்,  கோட்டை பகுதியில் 25 பேருக்கும், மருதானை பகுதியில் 16 பேருக்கும், மட்டக்குளி பகுதியில் 14 பேருக்கும், பொறளை பகுதியில் 13 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 128 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 59 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 91 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 42 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 17 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 15 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 7 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 4 பேருக்கும்  நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  74  ஆயிரத்து 852 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 831  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 637 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz