மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் சந்தேக நபர்கள் 6 பேர் கைது!

- Advertisement -

கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

- Advertisement -

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 20 கிராம் ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்,  கைது செய்யப்பட்டவர்களில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் என்பவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரும் அடங்குவதாக பிரதிப் பொலிஸ் மா  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும்  தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்ட குறித்த பெண்ணிடம் இருந்து  150 கிராம் ஹெரோயின் மற்றும் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், பிலியந்தலாவை பகுதியில் 146 கிராம் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz