மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகளவான தொற்றாளர்கள் கம்பஹாவில் அடையாளம்!

- Advertisement -

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய நாளில் 940 பேர் அடையாளங் காணப்பட்டுள்ள  நிலையில் அவர்களுள் நால்வர் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை  தந்துள்ளவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய நாளில் 278 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நீர கொழும்பு பகுதியில் 16 பேரும் ஜா எல மற்றும்  வத்தளை ஆகிய  பகுதிகளில் தலா 12 பேரும்  ஏனையவர்கள் பம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று  இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து  865 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில்  261 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில்  12 பேரும், புறக்கோட்டை பகுதியில் 12 பேரும், மட்டக்குளி பகுதியில் 11  பேரும், கொள்ளுப்பிட்டி ,பொரளை, கிராண்ட்பாஸ்,  தெஹிவளை  ஆகிய பிரதேசங்களில் 9 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  கொம்பெனித்தெரு , கறுவாத்தோட்டம் , கோட்டை , புறக்கோட்டை  வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் தலா 8 பேரும் பம்பலப்பிட்டி தெமட்டகொட  கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் தலா 7 பேரும் வெள்ளவத்தை புதுக்கடை   ஆகிய பகுதிகளில் 6 பேரும், நாரஹேன்பிட்டி மருதானை  களுபோவில ஆகிய பகுதிகளில் ஐவரும் ஏனையவர்கள் கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே களுத்துறை மாவட்டத்தில்  79 பேரும்  கண்டி மாவட்டத்தில் 88 பேரும்  காலி மாவட்டத்தில்  47 பேரும்   குருணாகல் மாவட்டத்தில் 51 பேரும் தொற்றுடக் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்,  மாத்தறை மாவட்டத்தில்  25  பேரும்  ரத்தினபுரி மாவட்டத்தில்  29 பேரும்  யாழ் மாவட்டத்தில்  14 பேரும்  நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  74 ஆயிரத்து  56 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து  688 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மேல்மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான   600   பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz