மெய்ப்பொருள் காண்பது அறிவு

அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை!

- Advertisement -

பாதாளகுழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் தாய் மற்றும் அவரது சகோதரியினுடைய  டீ என் ஏ மாதிரிகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக அவரின் நெருங்கிய உறவினரின் மரபனுமாதிரியை வழங்குமாறு இந்திய புலனாய்வு துறை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் குறித்த மரபனு மாதிரிகளை பெறுவதற்கு  அனுமதி வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம்  நீதிமன்ற அனுமதி கோரியிருந்தது.

இதன்படி குறித்த மாதிரிகளை பெறுவதற்கு களுத்துறை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமைய அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் ஊடாக அங்கொட லொக்காவின்  தாய் மற்றும் அவரின் சகோதரியின் மரபனுமாதிரி பெறப்பட்டுள்ளதாகவும் அதனை இந்திய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறைச்சாலை பஸ் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக   அங்கொட லொக்கா பெயரிடப்பட்டிருந்த நிலையில்  இந்த தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 21 பேர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாகவும்  அவர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz