மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 15 வருடங்களாக போலி ஆய்வுகூட உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனம்..!

- Advertisement -

பொரள்ளை பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான ஆய்வுக்கூட உபகரணங்களை விநியோகம் செய்துவந்த இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய தேசிய ஔடத கட்டுப்பாட்டு சபையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்போது, குறித்த இடத்தில் இருந்து காலாவதியான ஆய்வுக்கூட உபகரணங்கள் பல தேசிய ஔடத கட்டுப்பாட்டு சபையினரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் 15 வருடங்களாக போலி ஆய்வுகூட உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனம்..! 1

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆய்வுக்கூட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த உபகரணங்கள் குறித்த இடத்தில்நாடு மற்றும் விபரங்கள் போலியாக மாற்றப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கலாவதியான பொருட்கள் மீண்டும் போலி விபரங்களுடன் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் 15 வருடங்களாக போலி ஆய்வுகூட உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனம்..! 2

இதேவேளை, இந்த சட்டவிரோத நிறுவனமானது 15 ஆண்டுகளாக செயற்பட்டுள்ளதுடன்,  ஆய்வுக்கூட உபகரணங்களை களஞ்சியப்படுத்துவதற்கோ அல்லது பெற்றுக்கொள்வதற்கோ அனுமதி பெற்றிருக்க வில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 15 வருடங்களாக போலி ஆய்வுகூட உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனம்..! 3

அத்துடன், நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வு கூடங்களுக்கு இந்த நிறுவனத்தின் ஊடாக உபகரணங்கள் விநியோகிக்க்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சுற்றிவளைப்பின் பின்னர் குறித்த நிறுவனம் சீல் வைக்கபட்டுள்ளதுடன், தேசிய ஔடத கட்டுப்பாட்டு சபையினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz