மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கு பெசில் ராஜபக்ஸ மிகவும் பொருத்தமானவர் – திஸ்ஸ குட்டியாராச்சி கருத்து!

- Advertisement -

எதிர்காலத்தில், நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கு, பெசில் ராஜபக்ஸ மிகவும் பொருத்தமான நபராகும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவிக்கின்றார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

- Advertisement -

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, பொதுஜன பெரமுவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் குற்றஞ்சாட்டுகின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை குறிப்பிட்டார்

அமெரிக்காவில் ஒரு காலையும், இலங்கையில் ஒரு காலையும் வைத்துக் கொண்டுள்ள பெசில் ராஜபக்ஸவுக்கு நாம் ஒரு விடயத்தை தெரிவிக்கின்றோம்.நீங்கள் கட்சிக்காக சில விடயங்களை செய்துள்ளீர்கள். அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.ஆனால் தமது பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு, பலமான சக்திகளை தாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் கலந்துரையாடி அவற்றைத் தீர்த்துக் கொள்ளுங்கள், அதைவிடுத்து இல்லாத பிரச்சினைகளையும், நெருக்கடிகைளையும் ஏற்படுத்தி, அரசாங்கத்திற்குள் பிளவொன்று ஏற்பட்டுள்ளதாக கூறி, விமர்சனங்களைப் பரப்ப வேண்டாம். யாரை திருப்திப்படுத்துவதற்கு அல்லது மகிழச்சிப்படுத்துவதற்கு இதனை செய்கின்றீர்கள் என கேட்கின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz