மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும்: அலி சப்ரி!

- Advertisement -

நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனில், அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரினால்,  அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில், குறித்த பிரேரணை குறித்து இன்று உரையாற்றிய போதே, நீதியமைச்சர் அலிசப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என அத்துரலிய ரதன தேரரினால் அண்மையில் கேள்வி எழுப்பப்பபட்டிருந்தது.நாட்டில் அனைவருக்கும் ஒரேவிதத்திலும், நியாயமாகவும் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையே  ஒரே  ஒரே ஒரே சட்டம் என்ற விடயத்திலிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம்.நாட்டில் தனியார் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றமை குறித்து எனக்குத் தெரியுமா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.நாட்டில் தனியார் சட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுகின்றன.உதாரணமாக கண்டியர் விவாக மற்றும் விவாகரத்து சட்டம்.,  யாழ் விவாக உரிமை சட்டம் , தேசவழமைச் சட்டம், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்கள், பௌத விகாரைகள் மற்றும் தேவாலய சட்டம், ஹிந்துக் கலாசார சட்டம், முஸ்லிம் வக்ப் சட்டம், சிலோன் ஆலய சட்டம் என பல்வேறு தனியார் சட்டங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் மாத்திரமல்லாது, இந்தியா, பிலிப்பைன், இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் தனியார் சட்டங்கள் நிலைநாட்டப்படுகின்றன. இந்த நிலையில் அனைவருக்கும் ஒரே சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் எனில், முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் நீக்க முடியாது. அவ்வாறு எனில் அனைத்து தனியார் சட்டங்களையும் நீக்க வேண்டும்.அதைவிடுத்து முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் குறிப்பிட்டு, இனங்களுக்கு இடையே, விரக்தி நிலைமையை ஏற்படுத்துவது பொருத்தம் கிடையாது என நான் கூறிக் கொள்கின்றேன்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz