மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!

- Advertisement -

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பிரதமர் அனுமதித்திருந்த போதிலும், அது கைநழுவி போனமைக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூறவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரதமரின் அனுமதியை அமைச்சர் ஒருவர் நிராகரித்தமைக்கு காரணம், 20 ஆவது திருத்த சட்டத்தின் பின்னர் அமைச்சரவையின் முழு அதிகாரமும் ஜனாதியின்வசம் சென்றிருப்பதன் காரணமாகவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த பாவத்தை சுமக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 20 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் பிரதமர் அதிகாரம் அற்ற ஒருவராக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த திருத்த சட்டத்தில் உள்ளடங்கி இருக்கின்ற இவ்வாறான பாரதூரமான விடயங்களை தாங்கள் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை கவனத்தில் கொள்ளாது ஆதரவு வழங்கியிருந்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz