மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொரோனா..!

- Advertisement -

நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று மாத்திரம் 942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

- Advertisement -

இவ்வாறு நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 273 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொம்பனி தெரு பகுதியைச் சேர்ந்த 31 பேரும், பொறளை பகுதியைச் சேர்ந்த  23 பேரும், கொழும்பு கோட்டையைச் சேர்ந்த 21 பேரும், மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 19 பேரும், நாரஹென்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 11 பேரும் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  கொட்டாஞ்சேனை மற்றும் மருதானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தலா  8 பேருக்கும், கொள்ளுபிட்டி, கிரேண்பாஸ் மற்றும் கருவாத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா 7 பேருக்கும், வெள்ளவத்தை மற்றும் புறக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த தலா 6 பேருக்கும், பம்பலபிட்டி மற்றும் தெமட்டகொடை பகுதிகளைச் சேர்ந்த தலா 4 பேருக்கும் நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 181 பேருக்கும், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 102 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 80 பேருக்கும், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 19 பேருக்கும்,  அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த தலா 15 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரும், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேரும், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  73 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 211 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 526 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் முப்படையினரால் நடாத்தப்படும் 93 தனிமைபப்டுத்தல் நிலையங்களில் 8 ஆயிரத்து 728 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz