மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 850 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

- Advertisement -

நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 20 விமானங்கள் ஊடாக ஆயிரத்து 693 பேர் பயண நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்தபயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்கவிமான நிலைய கடமைநேர  பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கமைய கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 850 இலங்கையர்கள் 10 விமான சேவைகள் ஊடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதில் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 108 பேரும், சவுதி அரேபியாவில் இருந்து 102   உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் இராணுவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களில்  தங்கைவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 10 விமான சேவைகளின் ஊடாக 843 பேர் பல்வேறு தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz