மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதமரின் உறுதிமொழிக்கு சர்வதேச நாடுகள் பாராட்டு

- Advertisement -

கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியினை தாம் வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில்,  பிரதமரின் குறித்த தீர்மானத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச சுகாதாரக் கொள்கைகளுக்கமையவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும்  இலங்கை சாதகமான தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் குற்றவியல் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களின் கீழ் மாத்திரமே கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்,

எனினும் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் தற்போது கருத்துரைக்க முடியாது எனவும் அது தேசியப் பாதுகாப்பு  தொடர்பான விடயம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz