மெய்ப்பொருள் காண்பது அறிவு

நேற்றைய தினத்தில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

- Advertisement -

நேற்றைய தினத்தில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 976 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

- Advertisement -

மேலும், கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகைதந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 252 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பொரளை பகுதியில் 39 பேரும், நாரேன்பிட்டிய, மட்டக்குளிய மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 19 பேர் வீதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வெள்ளவத்தை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் தலா 18 பேரும், கொட்டாஞ்சேனை பகுதியில் 16 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 227 பேரும், மற்றும் கண்டி மாவட்டத்தில் 150 பேரும், ஏனைய மாவட்டங்களில் இருந்து 346 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பகுதியில் 28 பேரும், கம்பஹா பகுதியில் 16 பேரும், கனேமுல்ல பகுதியில் 13 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை மினுவங்கொடை கொத்தணி மற்றும் பேலியகொடை கொத்தணியில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 705 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த கொத்தணியுடன் தொடர்புடைய 63 ஆயிரத்து 659 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 210 ஆக உயர்வடைந்துள்ளது.

இதில் 65 ஆயிரத்து 52 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 5 ஆயிரத்து 788 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், நாட்டில் இதுவரை 370 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 94 கொரோனா தடுப்பு மத்திய நிலையங்களில் 9 ஆயிரத்து 62 பேர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 14 ஆயித்து 402 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz