மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் -பிரித்தானியா உறுதி!

- Advertisement -

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பிலான புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி Julian Braithwaite நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, இலங்கை, சிரியா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கனடா, ஜேர்மனி, மொன்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய இலங்கை தொடர்பான மத்திய குழுவினால், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினால் வெளியிடப்படும் அண்மைய அறிக்கையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி Julian Braithwaite குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் 7 மணியுடன் மூடப்படும்

சப்ரகமுவ மாகாணத்தில் மாலை 7 மணியுடன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதனை அறிவித்துள்ளார். இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் மருந்தகளுக்கு மாத்திரம் தொடர்ச்சியாக திறந்து வைப்பதற்கு...

Developed by: SEOGlitz