மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் 57 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை: பிரசன்ன ரணதுங்க!

- Advertisement -

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 57 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற போது சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் மூலம் பொதுமக்களுக்கும், பொதுமக்களின் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கும் கொரோனா தொற்று பரவல் ஏற்படாதிருக்க சிறந்த செயன்முறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டுமெனவும், இதன் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு விரைவாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

மண் சரிவு அபாயம் – விசேட எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 09 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன்படி, இந்த எச்சரிக்கை நாளை மாலை 6.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட...

Developed by: SEOGlitz