மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய கிழக்கு நாடுகளுக்கே இன்று அதிகளவிலான பயண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன!

- Advertisement -

கட்டுநாயக்க விமான நிலையமூடாக நேற்றைய நாளில் 22 விமான சேவைகளின் ஊடாக ஆயிரத்து 208 பேர் பயண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த பயண நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்ட மற்றும் குறித்த நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த பயணிகளின் மூலமே அதிக அளவிலான விமான பயணங்கள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் 685 இலங்கையர்கள் 09 விமானங்கள் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து 200 பேரும், அபுதாபியிலிருந்து 75 பேரும், சவுதி அரேபியாவிலிருந்து 75 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், குறித்த அனைவரும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் நிமித்தம் முப்படையினரால் நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில்13 விமான சேவைகள் ஊடாக 523 பேர் பல்வேறு தேவைகளின் நிமித்தம் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 250 பேரும், சவுதி அரேபியாவிற்கு 33 பேரும், சிங்கப்பூருக்கு 40 பேரும் பல்வேறு தேவைகளின் நிமித்தம் பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz