மெய்ப்பொருள் காண்பது அறிவு

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸார் விடுக்கும் விசேட வேண்டுகோள்!

- Advertisement -

எதிர்வரும் 14 ஆம் திகதி, சட்டவிரோதமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் களியாட்டங்கள் தொடர்பில் விசேட கவனஞ் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இதன்படி, சுகாதாரத் தரப்பின் அனுமதியின்றி எதிர்வரும் 14 ஆம் திகதி நிகழ்வுகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்

- Advertisement -

இது தொடர்பில் ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் ஏனைய பகுதிகளில், விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்  என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த தினத்தை அடிப்படையாக கொண்டு, சமூக வலைத்தளங்களின் ஊடாக ஊழல் மோசடிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், இவ்வாறான நிதி மோசடி நடவடிக்கைகளுக்கு இலக்காக வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இளைஞர் யுவதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் 7 மணியுடன் மூடப்படும்

சப்ரகமுவ மாகாணத்தில் மாலை 7 மணியுடன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதனை அறிவித்துள்ளார். இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் மருந்தகளுக்கு மாத்திரம் தொடர்ச்சியாக திறந்து வைப்பதற்கு...

Developed by: SEOGlitz