மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 975 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 971 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 4 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 200 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 912 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 787 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 694 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 18 இலட்சத்து 31 ஆயிரத்து 420 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கபுலியகந்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 8 ஆம் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நியுமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் அழற்சி ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று காரணமாக சிறுநீரக பாதிப்பு அதிகரித்தமை மற்றும் இரத்த விஷமடைந்தமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கெடவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக  கொரோனா நியுமோனியா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், குருணாகலை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நாரம்மல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா நியுமோனியா தாக்கம் காரணமாக கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அநுராதபுரத்தைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நியுமோனியா தாக்கம், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz