மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச விலை நீக்கம்!

- Advertisement -

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச விலை நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

இதன்படி, சீனி, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கான அதிகபட்ச விலை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் சலுகை விலையில் நுகர்வோருக்கு  வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் குறித்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரித்துள்ளார்.

அரிசி, பருப்பு, பால்மா, உருளைக்கிழங்கு, சீனி, சவர்க்காரம் உள்ளிட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு வரையான மூன்று மாத காலப்பகுதிக்கு குறித்த விலை குறைப்பு நடைமுறையில் காணப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz