கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அபாயம், மேல் மாகாணத்திற்கு வெளியில், பெரும்பாலும் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்திய ஹரித அலுத்கே தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மரண எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது.நாளொன்றுக்கு சுமார் ஐந்து முதல் 8 வரை உயிரிழப்புகள் பதிவாகின்றன. இறுதியாக உயிரிழந் ஏழு பேரை எடுத்துக் கொண்டால், அவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்திற்கு வெளியே பதிவாகியுள்ளன.கடந்த காலங்களில் ஏற்பட்ட மரணங்களில் நூற்றுக்கு 65 அல்லது 75 வீதமானவை கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே பதிவாகியிருந்தன. தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்து, மேல் மாகாணத்திற்கு வெளியே மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மாதத்தின் கடந்த நான்கு நாட்களில் பதிவாகிய மரணங்களில் பெரும்பாலும் மேல் மாகாணத்திற்கு வெளியே பதிவாகியுள்ளன.இந்த நிலையில் தொற்றாளர்களைப் போன்று உயிரிழப்பவர்களின் ஆபத்தும் தற்போது மேல் மாகாணத்திற்கு வெளியே சென்றுள்ளது.