மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவை சென்றடைந்தது ஆர்ப்பாட்ட பேரணி…!

- Advertisement -

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் பேரணியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் முன்னெடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது.

பேரணி நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால், நீதிமன்ற தடையுத்தரவு நேற்றுமுன்தினம் பெறப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில், குறித்த தடையுத்தரவை ஆட்சேபித்து சிலரால் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நகர்த்தல் பத்திரம் மீதான விசாரணையின் பின்னர் குறித்த தடை உத்தரவு மீள பெறப்பட்டதாக பொலிஸார் கூறுகிள்றனர்.

இதேவேளை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை சாவகச்சேரி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸாரால் தனித்தனியாக செய்யப்பட்ட குறித்த விண்ணப்பங்களே இன்று இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடைவிதிக்க கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களை நடத்த தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறை நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று மூன்றாவது  நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணி கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கபட்டு வருகின்றது.

இந்த நிலையில், திருகோணமலையில் இருந்து இன்றைய மூன்றாம் நாள் பேரணி ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு ஊடாக இந்த பேரணி வவுனியாவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz