பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளவுயர்வு விரைவாக பெற்றுக்கொடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தி மலையகத்தின் பல பகுதிகளில் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்ரஸின் அழைப்பின் பேரில் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்க்பட்டதுடன், அதற்கு பல தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் என்பன ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், தொழிலாளர்களது ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் இன்றைய அடையாள வேலை நிறுத்தம் அமைந்ததாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் இன்று முன்னெடுக்கபட்ட ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மலையக பெருந்தோட்டக் காணிகள் சிலவற்றை, அரசாங்கம் அதானி நிறுவனத்திற்கு வழங்க முயற்சிப்பதாக, அகில இலங்கை தோட்டதொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் குற்றஞ்சாட்டுகின்றார்.
பதுளை – ஹாலிஎல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.